ஆழ்குழாய் கிணறு ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் சாலை மறியலில்

ஆழ்குழாய் கிணறு ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-16 18:02 GMT
ஆவுடையார்கோவில்:
அறந்தாங்கி ஒன்றியம், ஊர்வணி ஊராட்சியில் உள்ள விக்னேஸ்வரபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தனிநபர் ஆக்கிரமித்து கொண்டு பட்டாவாக மாற்றியதை கண்டித்தும், அதற்கு உடந்தை போன அரசு அதிகாரிகளை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி-ஆவுடையார் கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்த பிரச்சினையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அப்பகுதியில் உள்ள 600 குடும்பங் களுக்கு தேவையான குடிநீர் அப்பகுதியிலிருந்து செல்வதால் அதனை பொதுமக்களுக்கு பாதகமில்லாமல் மீட்டுத்தர வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அறந்தாங்கி-ஆவுடையார் கோவில் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்