ஆம்பூர் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

ஆம்பூர் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-16 18:00 GMT
ஆம்பூர்

ஆம்பூர் டவுன் போலீசார் சாணாங்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரித்தனர். இதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கம்ம கிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 35), அழகாபுரி பகுதியை சேர்ந்த சத்தியநாதன் (54), சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (39) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்