சாயல்குடி,
கடலாடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
மாட்டு வண்டி பந்தயம்
கடலாடி அருகே ஆப்பனூர் அரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. அதன்படி பெரிய மாட்டு வண்டி பந்தயத்திற்கு சென்றுவர 12 கிலோமீட்டர் தூரம் மற்றும் சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 10 கிலோ மீட்டர் எல்கை நிர்ணயிக்கப்பட்டு இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம், நினைவு கோப்பை, குத்துவிளக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவதாக ரூ. 50 ஆயிரம் பரிசு சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாட்டு வண்டி பெற்றது. 2-வது பரிசு ரூ. 40 ஆயிரத்தை நெல்லை மாவட்டம் நாலாந்தளம் உதயம் துரை பாண்டியன் என்பவரது மாடும், 3-வது பரிசு ரூ.30 ஆயிரத்தை கடலாடி ஒன்றிய குழுத்தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் என்பவரது மாடும் பெற்றது.
பரிசுகள்
சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசு ரூ .30 ஆயிரத்தை நெல்லை மாவட்டம் வேளாங்குளம் கண்ணன் என்பவரது மாட்டுவண்டி பெற்றது. 2-வது பரிசு ரூ. 25 ஆயிரத்தை இருவேலி சிக்கந்தர் என்பவரது மாட்டுவண்டியும், 3-வது பரிசு ரூ. 20 ஆயிரத்தை சிவகங்கை மாவட்டம் உடைப்பன்பட்டி சிவ சின்னையா என்பவரது மாட்டுவண்டியும் பெற்றது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 34 வண்டிகள் பங்கேற்றன.