செல்போனை ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு குவிகிறது

Update: 2022-03-16 17:57 GMT
சாயல்குடி, 
சாயல்குடி அருகே சிக்கல் பகுதியை சேர்ந்த மாணவர்கள் மூன்றாம் வகுப்பு படிக்கும் அகமது சஹிம், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கபீஸ், முகமது இஸ்மத், ஐந்தாம் வகுப்பு படிக்கும் முகம்மது தன்வீர் ஆகிய 4 மாணவர்கள் நேற்று சிக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்றனர். செல்லும் வழியில் சிக்கல், முதுகுளத்தூர் சாலையில் கீழே கிடந்த செல்போனை எடுத்து சிறுவர்கள் சிக்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் செல்போன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து அதனை அவரிடம் ஒப்படைத்தனர். கீழே கிடந்த செல்போனை முறையாக ஒப்படைத்த மாணவர்களை தலைமை ஆசிரியர் ரத்தினம் ஜெயந்தி, செல்போன் உரிமையாளர் மற்றும் போலீசார் இனிப்பு மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர்.

மேலும் செய்திகள்