காளியம்மனுக்கு மது எடுப்பு திருவிழா

காளியம்மனுக்கு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-16 17:56 GMT
ஆதனக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டை மலையடி குளக்கரையில் காளியம்மன், பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் தாங்கள் வேண்டிய வரம் கிடைக்க நேர்த்திக்கடனாக ஒரு குடத்தில் சர்க்கரை அல்லது தயிர் போட்டு தென்னம்பாளையை குடத்தில் சொருகி பாளையின் மேல் பூ சுற்றி மேலே பச்சைக்கிளி போன்ற பொம்மைகள் வைத்து தயார் செய்வார்கள். பின்னர் பழைய ஆதனக்கோட்டை முருகன் கோவிலில் இருந்து முளைப்பாரியினை பக்தர்கள் எடுத்து கொண்டு தாரை தப்பட்டை முழங்க வந்தனர். அந்த மது குடத்தில் சர்க்கரை குடத்தை காளியம்மனுக்கும், தயிர் குடத்தை பிடாரியம்மனுக்கும் அபிஷேகம் செய்தனர். கோவில் பிரகாரத்தில் பொங்கல்  வைத்தும், கோவில் முன்பு கிடா வெட்டி பில்லிசோறு எரிந்து மது திருவிழாவினை சிறப்பாக கொண்டாடினர். இந்த விழாவில் ஆதனக்கோட்டை, சோத்துப்பாழை, சொக்கநாதப்பட்டி, சோழகம்பட்டி, குப்பையன்பட்டி, வண்ணாரப்பட்டி, மடத்துக்கடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்