மேலமறைக்காடார் கோவில் குடமுழுக்கு

மேலமறைக்காடார் கோவில் குடமுழுக்கு

Update: 2022-03-16 17:55 GMT
வேதாரண்யம்;
வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட மறைஞாயநல்லூர் கிராமத்தில்  பழமை வாய்ந்த வேதநாயகி அம்மன் மேலமறைகாடார் கோவில் உள்ளது. இந்த கோவில் முற்றிலும் சேதமடைந்து இறைவனை ஒரு கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபட்டனர். இந்த கோவிலை புதிதாக கட்டி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. திருப்பணி நிறைவு பெற்ற நிலையில்  நேற்று 4-ம் கால யாக பூஜை  முடிவு பெற்று  குடமுழுக்கு நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள், கிராம மக்கள் உள்பட ஏராளமானோர்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
குடமுழுக்கையொட்டி வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்