இளையான்குடி,
இளையான்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்த தர்மா (வயது 42) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களும், ரூ.750-ம் பறிமுதல் செய்யப்பட்டது.