புதுக்கோட்டை:
இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மயக்கவியல் மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதற்கு மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சாமிநாதன் தலைமை தாங்கினார். டாக்டர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் முகமது சுல்தான் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனர் சுவாதி ரெத்தினாவதி கலந்து கொண்டு, டாக்டர்கள் கலைவாணி, திலகவதி, தமிழ்மணி ஆகியோருக்கு மகளிர் மருத்துவர் விருதுகளை வழங்கி பேசினார். விழாவில் மருத்துவ குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.