திருப்பத்தூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து ஆய்வு

திருப்பத்தூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Update: 2022-03-16 17:38 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள சின்னதளிஹள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதனை திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா, நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, பொறியாளர் உமாமகேஸ்வரி, பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு மேற்கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுமா என்றும், மோட்டார்கள் சரிவர இயங்குகிறதா என்றும் ஆய்வு செய்தனர்.

 பின்னர் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் கூறுகையில் திருப்பத்தூர் நகராட்சிக்கு மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 5.5 லட்சம் லிட்டர் குடிநீரும், தென்பெண்ணை ஆற்றில் இருந்து 2 லட்சம் லிட்டர் குடிநீரும், அம்பலூர் ஆற்றில் இருந்து 2.5 லட்சம் லிட்டர் குடிநீரும் வருகிறது. தற்போது திருப்பத்தூர் நகருக்கு 11.5 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது, 2 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இந்த குடிநீரை திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 23 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் ஏற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வருவது 10 நாட்களாக தாமதம் ஆனது. தற்போது தற்போது அனைத்து இடங்களிலும்  குடிநீர் சீராக வழங்கப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்