மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டியில் அன்னவாசல் அரசு பள்ளி மாணவர்கள் 7 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை 4-வது இடம் பிடித்தனர்
அன்னவாசல் அரசு பள்ளி மாணவர்கள் 7 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர்.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான 7-வது தேக்வாண்டோ போட்டியில் அன்னவாசல் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 7 தங்கப்பதக்கங்கள், 13 வெள்ளிப்பதக்கங்கள், 21 வெண்கலப்பதக்கங்கள் வென்று மொத்த தர வரிசையில் 97 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தை பிடித்தனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இதில், நான்காவது இடம் பிடித்த மாணவ-மாணவிகள், பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குநர் முத்துலட்சுமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு சார்பிலும் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.