முதல்- அமைச்சரிடம் பேசி நிதி பற்றாக்குறையை போக்க நடவடிக்க
நாகை நகராட்சியில் நடக்கும் பணிகளுக்கு முதல்- அமைச்சரிடம் பேசி நிதி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர சபை தலைவர் மாரிமுத்து கூறினார்.
நாகப்பட்டினம்;
நாகை நகராட்சியில் நடக்கும் பணிகளுக்கு முதல்- அமைச்சரிடம் பேசி நிதி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர சபை தலைவர் மாரிமுத்து கூறினார்.
மாதாந்திர செயற்குழுக் கூட்டம்
நாகை இந்திய வர்த்தக தொழிற்குழும மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சலீம்முதின் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன் முன்னிலை வைத்தார். நாகை நகரசபை தலைவர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், நாகை காந்தி மார்க்கெட்டை சீரமைப்பது, நகராட்சி பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை உடைப்புகளை சீரமைத்து, சாலைகளை புதுப்பிப்பது, தாமரை குளத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை விரைவில் முடிப்பது,
நிதி பற்றாக்குறை
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட தோணித்துறை ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கேட்பது, கடைத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நகர சபை தலைவர் மாரிமுத்து பேசினார். அப்போது அவர், நாகை நகராட்சியில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்து உரிய நிதியை பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். கூட்டத்தில் துணைத் தலைவர் சேகர், இணைச்செயலாளர் பக்ருதீன், பொருளாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.