விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-03-16 17:33 GMT
ராமநாதபுரம், 
தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலம் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அவ்வையார் (வயது 46). இவர் ராமநாதபுரம் பகுதியில் அழகு செடி விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வையார் பட்டணம்காத்தான் பழைய சோதனை சாவடி பகுதியில் தான் வசித்து வந்த அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்