பேச தவிர்த்த காதலியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய டிரைவர் கைது
பேச மறுத்த காதலியிடம் தகராறு செய்து தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்
பேச மறுத்த காதலியிடம் தகராறு செய்து தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அபி என்ற கணேஷ்குமார் (வயது 24), டிரைவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை ஓராண்டாக காதலித்து வந்தார். கணேஷ்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் இளம்பெண், காதலனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தார்.
நேற்று அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே அவரின் காதலி சென்று கொண்டிருந்தார். காதலியை கணேஷ்குமார் வழிமறித்து ஏன் என்னுடன் பேசுவதைத் தவிர்க்கிறாய்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த அவர் திடீரெனக் காதலியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காதலி அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக காதலன் கணேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.