காதல் ஜோடி தஞ்சம்

பட்டிவீரன்பட்டி போலீஸ்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2022-03-16 17:10 GMT
திண்டுக்கல்:

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த மாரிமுத்து மகன் சவுந்திரராஜன் (27). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகள் ஜான்சி (வயது 25). இவர், நர்சிங் படிப்பு முடித்துள்ளார். இவர்கள் 2 பேரும் ‘பேஸ்புக்’ மூலமாக அறிமுகமாகி உள்ளனர். தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். 

இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்தனர். இதற்கிடையே அவர்களது பெற்றோர் தேடுவதை அறிந்த காதல்ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில்  தஞ்சம் அடைந்தனர். 
இதையடுத்து அவர்களின் பெற்றோர்களை போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது சவுந்திரராஜனின் பெற்றோர் வரவில்லை. ஆனால் ஜான்சியின் பெற்றோர் போலீஸ்நிலையத்துக்கு வந்து தனது மகளின் திருமணத்தில் உடன்பாடில்லை என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்பின்பு காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பம்போல் வாழலாம் என்று போலீசார் அனுப்பி வைத்தனர்.  

மேலும் செய்திகள்