மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு
நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.
நாகூர்;
நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.
சாராயம் கடத்தல்
நாகை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் கடந்த 14-ந் தேதி மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மாநிலம் வாஞ்சூரிலிருந்து சாராயம் கடத்தி வந்தனர். தெத்தி பிரிவு சாலையில் அவர்கள் வந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து இருந்த சிறுவன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தான்.
பரிதாப சாவு
இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.