ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்

தியாகதுருகத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-16 16:57 GMT
கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு தியாகதுருகம் மட்டுமின்றி புக்குளம், பானையங்கால், சித்தலூர், வேங்கைவாடி, குடியநல்லூர், கொட்டையூர் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 
மாணவர்கள் பள்ளி முடிந்து மாலை நேரங்களில் வீட்டிற்கு செல்லும் போது கள்ளக்குறிச்சியில் இருந்து கொட்டையூருக்கு ஒரே ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது. 

ஆபத்தான பயணம்

இதனால் பஸ்சில் கூட்டம் அலைமோதுவதால், மாணவர்களும், மாணவிகளும் படியில் தொங்கியவாறும், பக்கவாட்டில் தொங்கியவாறும் ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மாலை நேரங்களில் இந்த பஸ்சை விட்டால் ஊருக்கு செல்வதற்கு வேற அரசு பஸ் இல்லை என பொதுமக்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர். 

எனவே மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து கொட்டையூருக்கு மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்