திருக்கோவிலூர் அருகே உடல் கருகி பெண் சாவு
திருக்கோவிலூர் அருகே உடல் கருகி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரசோழபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சாரங்கபாணி மனைவி சிவகாமி(வயது 60). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்தது. இதில் சிவகாமியின் உடல் முழுவதும் தீ பற்றியதில் பலத்த காயமடைந்தார்.
இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திாிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவகாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.