நெல்லை வாலிபர் தற்கொலை

நெல்லை வாலிபர் தற்கொலை;

Update: 2022-03-16 16:14 GMT
பொள்ளாச்சி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் முத்துக்குட்டி(வயது 18). பொள்ளாச்சியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்ேடாரில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொள்ளாச்சிக்கு வந்து கொண்டு இருந்தது. ஊத்துக்காடு ரோடு ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து முத்துக்குட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்