சோளிங்கர் நகராட்சியில் கண்காணிப்பு ேகமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
சோளிங்கர் நகராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.;
சோளிங்கர்
சோளிங்கர் நகராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கூட்டுச்சாலை, பஸ் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கும் குற்றச்சம்பவங்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவிட்டு இருந்தார்.
சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பல்ேவறு கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அங்கு ஒரு சில நேரத்தில் இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போவதை கண்காணிக்க 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் நகராட்சியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த கேமரா பதிவுகள் சோளிங்கர் போலீஸ் நிலையம், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.