பி.ஏ.பி. கால்வாயில் பெண் பிணம் மீட்பு

பி.ஏ.பி. கால்வாயில் பெண் பிணம் மீட்பு

Update: 2022-03-16 16:14 GMT
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே வதம்பச்சேரி பி.ஏ.பி. கால்வாயில் இன்று மாலை 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்தது. இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை, சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்