பகுதிநேர ரேஷன் கடை திறக்க மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு
சயனபுரம் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன்கடை திறக்க மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தார்.
நெமிலி
சயனபுரம் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன்கடை திறக்க மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் ஊராட்சியில் ரேஷன் கடை இயங்கிவருகிறது. இதில் 758 குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சயனபுரம் காலனியில் உள்ள 152 குடும்ப அட்டை தாரர்களுக்கு தனியாக பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதன் அடிப்படையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பரிந்துரையின் பேரில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தலின் படி சயனபுரம் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு, வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) அருட்செல்வம் உடனிருந்தனர்.