டிரெய்லர் லாரியில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

டிரெய்லர் லாரியில் மோட்டார்சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-03-16 15:47 GMT
ராணிப்பேட்டை
டிரெய்லர் லாரியில் மோட்டார்சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம், குமணந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி (வயது 50). இவர் நேற்று பொன்னை சாலையில் சென்று கொண்டிருந்தார். லாலாபேட்டை அருகே சென்றபோது முன்னால் சென்ற டிரெய்லர் லாரியின் பின் பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனிசாமி இறந்து விட்டார். 

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்