சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
மேல் விஷாரத்தில் சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
மேல் விஷாரத்தில் சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது பாஷா (வயது 29). இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளார். இதில் சிறுமி கர்பமாக்கியுள்ளார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முகம்மது பாஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.