முத்தையாபுரம், கோவில்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
முத்தையாபுரம், கோவில்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என முத்தையாபுரம் துணைமின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவில்பட்டி உப மின் நிலையம், எப்போதும்வென்றான் உப மின் நிலையம் ஆகியவற்றில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மேற்படி உயர் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில்பகுதி, இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி பகுதிகளிலும், எப்போதும் வென்றான், எட்டையாபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர் மற்றும் சூரங்குடி பகுதிகளில் மின்சாரம் கிடைக்காது.
இதேபோல கழுகுமலை, விஜயாபுரி, கோவில்பட்டி சிட்கோ, எம்.துரைச் சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி உப மின் நிலையங்களில் மதியம் 1- மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்படி உப மின் நிலையங் களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களில் மேற்கண்ட நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.