கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்க நாயகலு தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினா். இதில் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்புகுழு ஒருங்கிணைப் பாளர் கோபாலகிருஷ்னன், துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ், ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர் கருப்பசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் ராகுல், தேசிய விவசாயிகள் ஊடக பொறுப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜிடம் வழங்கிய மனுவில் கூறியிருந்த தாவது:-
இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகளை கோவில்பட்டி தாலுகாவில் இருந்து பிரித்து, தென்காசி மாவட்டத்துடன் இணைக்க போவதாக செய்தி பரவியதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந் துள்ளனர்.இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகளை தூத்துக்குடி வருவாய் மாவட்டம், கோவில்பட்டி தாலுகாவில் தொடரவும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.