மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

காட்டுப்புத்தூர்,மார்ச்.17-
காட்டுப்புத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் பிச்சை என்கிற வரதராஜன். இவரது மனைவி சுசிலா (வயது 85). இவர் நேற்று அதிகாலையில் கோலம் போடுவதற்காக வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தான். இதில் சங்கிலி சுசிலாவின் காதுகளில் சிக்கியது. ஆனாலும் விடாமல் பிடித்து இழுத்ததில் அவரது காது கிழிந்து ஆசாமியின் கையில் தங்க சங்கிலி சிக்கியது. இதனால் வேதனையால் அலறி துடித்த சுசிலாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் ஆசாமி மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றான். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மூதாட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.