வெவ்வேறு விபத்துகளில் ஐ.டி. நிறுவன ஊழியர், கண்டக்டர் உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் ஐ.டி. நிறுவன ஊழியர், கண்டக்டர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருச்சி, மார்ச்.17-
வெவ்வேறு விபத்துகளில் ஐ.டி. நிறுவன ஊழியர், கண்டக்டர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
ஐ.டி. நிறுவன ஊழியர்
திருச்சி முடிகண்டம் காலனிதெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது39). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். இவர் திருச்சி பெரியகடைவீதியில் தனது நண்பர்களை தினந்தோறும் சந்தித்துப் பேசுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பேசி விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் அருகே சென்றபோது, நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தநிலையில் வெகு நேரமாகியும் சக்திவேலை காணாததால் அவரது தம்பி சரவணன் பல்வேறு இடங்களிலும் தேடினார். அப்போது பஞ்சப்பூர் அருகே அவர் விபத்தில் இறந்து கிடப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்.
முன்னாள் கிராம நிர்வாக உதவியாளர்
லால்குடி அருகே உள்ள மணக்கால் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்டர் தேவதாஸ் (65). முன்னாள் கிராம நிர்வாக உதவியாளரான இவருக்கு ஜனோவா மேரி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இவர் கொப்பாவளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
கண்டக்டர் பலி
தா.பேட்டையை அடுத்த மேட்டுப்பாளையம் கோனேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (42). இவர் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் பணி முடித்து முசிறியில் இருந்து கோனேரிப்பட்டி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அவர் சாலையோர புளியமரத்தில் மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குறித்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் பாலேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.