மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க 22-ந்தேதி கடைசி நாள்

மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க 22-ந்தேதி கடைசி நாள்

Update: 2022-03-16 13:20 GMT
திருச்சி, மார்ச்.17-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 29 விளையாட்டு விடுதிகள், 5 விளையாட்டுப் பள்ளிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
அதே போல ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற தேர்வு செய்யும் வகையில் 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி முதல் திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்களுக்கு தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், வாலிபால், வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மாணவிகளுக்கு, தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, வாலிபால், வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜுடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாகை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள www.sdat.tn.gov.in என்றஇணையதள முகவரில் வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்குள் விண்ணப்பிகக வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்