வீட்டுமனை பட்டா ேகட்டு பழங்குடியினர் சமூகத்தினர் தர்ணா
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு பழங்குடியின சமூகத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.;
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு பழங்குடியின சமூகத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு எஸ்.சி, எஸ்.டி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை தரையில் வைத்து, தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
தாசில்தார் கோவிந்தராஜ் அங்கு வந்து, எஸ்.டி. என மக்கள், ஒருங்கிணைப்பாளர் ரவியை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். நீங்கள் ஏற்கனவே வசித்த ஈச்சாந்தாங்கல் இடத்தை விட தற்போது இடையான்குளத்தூரில் புதிதாக வீட்டுமனை பட்டா வழங்க தயார் நிலையில் உள்ளது. இன்னும் 20 நாளுக்குள் உங்கள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும், எனத் தாசில்தார் தெரிவித்தார்.
இதையடுத்து பழங்குடியின சமூகத்தினர் அனைவரும் கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடந்த தர்ணா போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.