திருச்செந்தூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருச்செந்தூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-03-16 12:12 GMT
திருச்செந்தூர்:
சாத்தான்குளம் தாலுகா புத்தன்தருவை கஸ்பா தெருவை சேர்ந்த சேர்மதுரை மகன் பெரியமுத்து (வயது 23). இவர் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மானாடு கிராமத்தில் ஒரு பனங்காட்டில் பனை ஏறும் வேலை செய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டாராம். நேற்று முன்தினம் பகலில் மானாடு பனங்காட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், அவருடைய தந்தை அந்த பனங்காட்டுக்கு சென்று அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் செய்திகள்