வாணியம்பாடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது. 27 பவுன் நகை பறிமுதல்

வாணியம்பாடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-16 11:55 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே அலசந்தாபுரம் பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு டைலர் குமரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்தசம்பவம் குறித்து குமரன் திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்த வந்தனர்.

இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காட்வின் மோசஸ் (வயது 42), சந்திரமோகன் (30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திம்மாம்பேட்டை பகுதியில் குமரன் வீடு உள்பட பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்து, அவர்களிளிடம் இருந்து 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்