ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Update: 2022-03-16 11:32 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூலித் தொழிலாளி
தூத்துக்குடி அண்ணா காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 47). கூலித் தொழிலாளி. இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தாராம். சில மாதங்கள் முன்பு வரை மீளவிட்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜா, நோயால் மிகுந்த அவதிப்பட்டு வந்தாராம்.
தற்கொலை
இதில் மனம் உடைந்த ராஜா நேற்று காலை தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்டுப்பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நின்று கொண்டு இருந்தாராம். அப்போது, அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து ராஜா தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்