வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, வாணியம்பாடி நியூடவுனில் உள்ள, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பட்டா, கல்வி உதவித்தொகை, பல்வேறு சான்றிதழ் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதன் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கு இந்த ஆண்டு நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை துரிதமாகவும், முழுமையாகவும், முறையாகவும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது ஆணையாளர் ஸ்டான்லிபாபு, என்ஜினீயர் சம்பத், மேலாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.I