செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம்
செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 9-ந் தேதியன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்துக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் செய்தனர்.
இதனை தொடர்ந்து 10-ந்தேதி சூரியபிரபை, 11-ந்தேதி பூதவாகனம், 12-ந்தேதி நாக வாகனம், 13-ந்தேதி.ஆதிகாரநந்தி, 14-ந் தேதி 63 மூவர் திருவிழா நடைபெற்றது.
நேற்று தேரோட்டம் நடந்தது. மரத்தேரில் காமாட்சி அம்மனுடன் ஏகாம்பரேஸ்வரர் உற்சவ கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தார். இதனையடுத்து இன்று (புதன்கிழமை) தொட்டி பல்லாக்கு, நாளை(வியாழக்கிழமை மறுநாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 18-ந்தேதி நடராஜன் உற்சவம், மற்றும் தீர்த்தவாரியும் திருக்கல்யாண திருவிழாவும் நடைபெறுகின்றன.