ஒத்தாண்டேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருவள்ளூரை அருகே ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-16 00:44 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் மிகவும் பழமை வாய்ந்த குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 7-ந் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. 

இதில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் குளிர்ந்த நாயகியுடன் ஒத்தாண்டேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த தேரை திருமழிசை, பூந்தமல்லி, வெள்ளவேடு, அரண்வாயல், மணவாளநகர், திருவள்ளூர் போன்ற சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

அதேபோல, திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள காமாட்சியம்மன் சமேத சோளீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சுவாமி வழிபாடு செய்தனர்.

இதேபோல், மீஞ்சூரில் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்டம் நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் செய்திகள்