திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் 3 பேருக்கு அடி-உதை - போலீசார் விசாரணை
முன்விரோதம் காரணமாக 3 பேரை அடித்து உதைத்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் வைகை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பாலாஜி(வயது 20). இவருடைய நண்பர்கள் மகேஷ்(20) மற்றும் விஜய்(19). இவர்கள் நேற்று முன்தினம் கஸ்தூரிபாய் நகர் கோவிலின் பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், நவீன், ரிஷி ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு 3 பேரையும் தகாத வார்த்தையால் பேசி கையாளும் இரும்பு கம்பியாலும் தாக்கினர். மேலும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த தாக்குததில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி பாலாஜி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஆகாஷ், நவீன், ரிஷி ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.