வாலிபரிடம் ஜேப்படி செய்த பெண் கைது

வாலிபரிடம் ஜேப்படி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-15 22:29 GMT
நாகர்கோவில்:
வாலிபரிடம் ஜேப்படி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் மேலராமன்புதூர் சற்குணவீதி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறமுயன்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.200-ஐ ஒரு பெண் ஜேப்படி செய்து விட்டு ஓடினார்.
உடனே ராஜேசும் அங்கு நின்றவர்களும் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து நேசமணிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் விசாரணை நடத்திய போது, அந்த பெண் பொள்ளாச்சி நரிக்குறவர் காலனியை சேர்ந்த பவானி (38) என்பது தெரியவந்தது. ராஜேஷிடம் ஜேப்படி செய்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, பவானியை கைது செய்தனர். 
---

மேலும் செய்திகள்