செல்போன் செயலியில் கடன்: பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் தற்கொலை

செல்போன் செயலியில் கடன் வாங்கிய தனியார் பாதுகாப்பு நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-03-15 21:14 GMT
ஹாசன் உதயநகர் படாவனே பகுதியை சேர்ந்தவர் அப்ரீஷ் (வயது 40). இவர் அந்தப்பகுதியில் சொந்தமாக பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்தார். தனது நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக செல்போனில் கடன் வாங்கும் செயலி மூலம் ரூ.4 லட்சம் கடன் வாங்கினார். இந்த நிலையில் ெகாரோனா காரணமாக பாதுகாப்பு நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். 

இந்த நிலையில் கடன் கொடுத்த செல்போன் செயலி நிறுவனம், வட்டியுடன் ரூ.10 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று கூறியது. மேலும், உங்களின் தனிப்பட விவரங்கள், படங்கள், வீடியோக்கள் உள்ளதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் ெவளியிடுவதாகவும் அந்த நிறுவனம் மிரட்டி உள்ளது. இதனால் பயந்துபோன அப்ரீஷ், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

மேலும் செய்திகள்