‘ஹிஜாப்’ வழக்கில் தீர்ப்பு: கர்நாடகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு எதிரொலியாக அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் நேற்று பெங்களூரு, மைசூரு, தட்சிண கன்னடா, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ராய்ச்சூர், பெங்களூரு, கலபுரகி உள்பட சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பாகல்கோட்டை, மங்களூரு, உடுப்பி, கலபுரகி, ராய்ச்சூர், சிவமொக்கா ஆகிய பகுதிகளில் நேற்று போலீசார் அமைதியை நிலைநாட்டும் வகையில் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.