ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.;
ஈரோடு
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவில், கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸவேஸ்வரர் கோவில், மாதேசியப்பன் வீதியில் உள்ள மாதேஸ்வரர் கோவிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.