25 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பெண்கள் கைது

25 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பெண்கள் கைது

Update: 2022-03-15 20:52 GMT
நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழமாத்தூரில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழமாத்தூர் போஸ் மனைவி ராணி (வயது 42) என்பவர் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. அந்த வீட்டிலிருந்து 25 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை போலீசார் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ரத்தினம் மனைவி வசந்தா (50), வீட்டின் உரிமையாளர் ராணி ஆகியோரைப் பிடித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, வசந்தாவின் கணவர் ரத்தினத்தைத் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்