அசோலா வளர்ப்பு குறித்து செயல் விளக்கம்
பட்டுக்கோட்டையில் அசோலா வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை:-
பட்டுக்கோட்டையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஈச்சங்கோட்டை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியின் ஒரு பகுதியாக வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வேலாயுதம், உதவி பேராசிரியர்கள் விஜய் செல்வராஜ், வெங்கடலட்சுமி ஆகியோரின் அறிவுரைப்படி மாணவர்கள் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு முறைகளை குறித்தும், நெல் வயல்களில் அசோலாவின் பயன்கள் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். இதில் பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பாபு, தோட்டக்கலை உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.