கோவிலை சென்றடைந்த பண்ணாரி அம்மன் சப்பரம்
கோவிலை பண்ணாரி அம்மன் சப்பரம் சென்றடைந்தது.;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 8-ந் தேதி அதிகாலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று இரவு பண்ணாரி அம்மனின் சப்பர வீதி உலா பண்ணாரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்று வந்தது. கடந்த 13-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் பகுதிகளில் அம்மனின் சப்பர வீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம் இரவு வீதி உலா முடிந்ததும் சத்தியமங்கலத்தில் உள்ள சவுடாம்பிகை கோவிலில் பண்ணாரி அம்மன் சப்பரம் தங்க வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 5 மணி அளவில் சவுடாம்பிகை அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு கோட்டுவீராம்பாளையம், பட்டவர்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, சமத்துவபுரம், புதுகுய்யனூர், பசுவபாளையம், புதுபீர்கடவு, ராஜன்நகர் வழியாக நேற்று நள்ளிரவு பண்ணாரி அம்மனின் சப்பரம் மீண்டும் கோவிலை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் குழி கம்பம் போடப்பட்டது.