குடிநீர் கிணறுகளை நகராட்சி தலைவர் ஆய்வு
கடையநல்லூரில் குடிநீர் கிணறுகளை நகராட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சிக்கு கருப்பாநதி குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 55 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீரும் சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. கடையநல்லூர் அருகே கல்லாறு மற்றும் கருப்பாநதி அணையில் இருந்து வரும் தண்ணீரை பெரியாற்று படுகையில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்்த்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்து அனுப்புகின்றனர்.
கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கடையநல்லூர் நகராட்சி தலைவர் ஹபிபுர் ரஹ்மான், கல்லாறுக்கு சென்று நகராட்சி கிணறுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், பிட்டர் காஜா மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.