லாரியில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
வெம்பக்கோட்டை அருகே லாரியில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
விருதுநகர்,
வெம்பக்கோட்டை தாசில்தார் சுந்தரமூர்த்தி அப்பநாயக்கன்பட்டியில் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அந்த லாரியில் 277 சிப்பங்கள் ரேஷன் அரிசிஇருந்தது. அதன்எடை 13,404 கிலோ ஆகும். லாரியில் இருந்த ரேஷன் அரிசி சிப்பங்களை சிவகாசி நுகர்பொருள் வாணிபக்கிட்டங்கியில் வருவாய் துறையினர் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் லாரியை விருதுநகர் உணவுப் பொருட்கள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் தாசில்தார் சுந்தரமூர்த்தி ஒப்படைத்தார். இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு ரூ.75,783 ஆகும்.