ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் பொதுத்துறைகாப்பீட்டு நிறுவனத்தின் முன்பு 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சஞ்சீவி சுப்பிரமணியன், ராஜபாளையம் பட்டால் நிர்வாகி பேச்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். முன்னதாக மாவட்ட செயலாளர் சுவிசேஷமுத்து வரவேற்றார். முடிவில் சிவகாசி நிர்வாகி அமிர்தம் நன்றி கூறினார்.