மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-15 19:58 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள வாரச்சந்தை பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு மது விற்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், உடையார்பாளையம் திருச்சி ரோட்டு தெருவை சேர்ந்த பாண்டித்துரை(வயது 38) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பாண்டித்துரையை கைது செய்து, அவரிடம் இருந்த 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்