பெருமாள்-தாயார் திருக்கல்யாணம்

பெருமாள்-தாயார் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2022-03-15 19:57 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட பெருமைபெற்ற மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்று மாலை நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் அனிதா, கட்டளைதாரர் அரும்பாவூர் பாலாஜி ரெட்டியார், கோவில் முன்னாள் அறங்காவலர்கள் வள்ளி ராஜேந்திரன், சரவணன், நாயுடு மகாஜன சங்கம் சார்பில் கண்ணன் மற்றும் திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இரவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை கோவில் பட்டர் பட்டாபிராமன், சிறப்பு ஹோமத்தை திருமழிசை பட்டர் திரிவிக்ரமன் நடத்தி வைத்தனர்.
இன்று (புதன்கிழமை) வெண்ணெய்த்தாழி உற்சவமும், இரவில் குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் தொடங்கி நடக்கிறது. 18-ந்தேதி காலை துவாதச ஆராதனமும், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும், 19-ந்தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவில் புன்னைமர வாகனத்தில் திருவீதி உலாவும், 20-ந்தேதி காலை மட்டையடி, இரவில் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 21-ந்தேதி காலை மஞ்சள் நீர், இரவில் விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.இதைத்தொடர்ந்து 24-ந் தேதி திருத்தேர் 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவில் பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடு நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோவில் சீர்பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்