மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு

பேட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் இறந்தார்.;

Update: 2022-03-15 19:48 GMT
பேட்டை:
பேட்டை எம்.என்.பி.2-வது தெருவை சேர்ந்தவர் நூர்தீன். இவரது மனைவி நபீஷாபீவி (வயது 65). இவர் நேற்று மாலையில் கடைக்கு செல்வதற்காக சேரன்மாதேவி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கங்கைகொண்டானை சேர்ந்த கொத்தனாராக வேலை பார்த்து வரும் காளான் (35) என்பவர் வேலையை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக நபீஷா பீவி மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நபீஷாபீவி இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்