மேலகல்லூர், சீதபற்பநல்லூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

மேலக்ல்லூர், சீதபற்பநல்லூர் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-15 19:31 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மேலக்கல்லூர் மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய துணை மின் நிலையங்களில் 17-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் வரும் மேலக்கல்லூர், சேரன்மாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு, புதூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளுக்கு 17-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு, கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்